எனது அரசியல் பயணம் முடிவுக்கு வருகின்றது! பகிரங்கமாக அறிவித்தார் அலி சப்ரி எம்.பி
"சமூக மத்தியில் அதிகளவுக்கு பேசுபொருளாக தான் மாறியதாகவும் இத்துடன் தனது அரசியல் பயணம் முடிவுக்கு வரப்போவதாகவும்'' நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தான் எவ்வித மோசடிக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், நேற்று முன்தினம்(23.05.2023) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சமூகம் மத்தியில் அதிகளவுக்கு பேசுபொருளாக தான் மாறியதாகவும் இத்துடன் தனது அரசியல் பயணம் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் கோரிக்கை
இதன்போது தன்னை புத்தளம் பெரிய பள்ளிவாசல், சிவில் அமைப்புக்கள் மற்றும் புத்தளம் மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தான் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடுவேன் என்றும், அது தவிர புத்தளம் மாவட்டத்தில் எவர் தேர்தலுக்கு முன்னின்றாலும் தாம் அதற்கு ஆதரவாக இருப்பதாவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கம் மற்றும் ஒரு தொகை கையடக்க தொலைபேசிகளுடன் சுங்க அதிகாரிகளால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam