தோப்பூரில் போதைப்பொருளுக்கு எதிரான மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட தோப்பூர் - அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று (07) காலை இடம்பெற்றது.
"நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போதைப்பொருளற்ற பிரதேசத்தை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பேரணி
பொலிஸார், பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களின் ஒத்துழைப்போடு இப்பேரணி இடம்பெற்றுள்ளது.
இதில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.நிஸ்மியும் கலந்து கொண்டார்.
விழிப்புணர்வு
இதன்போது பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் போதைப்பொருளுக்கு எதிரான சுலோகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி வீதிகளில் விழிப்புணர்வூட்டி பேரணியாகச் சென்றனர்.
தோப்பூர் - அல்ஹம்றா மத்திய கல்லூரி முன்றலிலிருந்து ஆரம்பமான பேரணி உள் வீதிகளில் பயணித்து பிரதான வீதியூடாகச் சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.







பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
