உயர்தரப் பரீட்சையில் வினாத்தாள்கள் நேர காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம் (Photos)
கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின்போது வினாத்தாள்கள் நேர காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தினம் நடைபெற்ற இணைந்த கணித பாட பரீட்சையின் போது, வழங்கப்பட்ட வினாத்தாள்களில் முதலாம் பகுதியும், இரண்டாம் பகுதியும், காலை 8.30 மணிக்கே மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் குறித்த வினா தாள்களில் இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 8.30 மணிக்கு வழங்கப்பட்டிருந்ததோடு, மற்றைய முதலாம் பகுதி வினாத்தாள் மாணவர்கள், பரீட்சை மேற்பார்வையாளரிடம் கோரிய இதற்கிணங்க அதன் பின்னர் காலை 10 மணியளவில் மற்றைய வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பரீட்சை வினாத்தாள்கள் 11.40 மணிக்கு சரியாக முடிவுறுத்தப்பட்டதாகவும், மாணவர்களும், பெற்றோரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ் விடயம் குறித்து பெற்றோர் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குச் சென்று தமது பிள்ளைகளுக்கு நடந்த அநீதி தொடர்பில் எழுத்து மூலம் பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் இவ் விடயம் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியன், பட்டிருப்பு வலயக்கல்வி அதிகாரிகளுடனும், பெற்றோர்களுடனும், கலந்துரையாடியுள்ளார்.
இன்று நடைபெற்ற பரீட்சையின் போது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட தவறு தொடர்பாக குறித்த பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும்.
எனினும், மாணவர்களுக்கு நடந்த அநீதி தொடர்பில், தான் கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து அவரது கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் இதன்போது ஊடகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்பவர்கள் தொடர்பில் விசேட அறிவித்தல்






கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 8 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam