உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைத்தால் நீண்ட காலத்திற்கு அந்த பரீட்சையை நடாத்த முடியாது போகும்! லக்குமார் பெர்னாண்டோ
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைத்தால், நீண்ட காலத்திற்கு அந்த பரீட்சையை நடாத்த முடியாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபு தீவிரவமாக பரவி வரும் நிலையில் உயர்தரப் பரீட்சையை உரிய காலத்தில் நடாத்த தவறினால், சில வருடங்களுக்கு பரீட்சையை நடாத்த முடியாத அபாய நிலை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒத்தி வைக்கப்படக்கூடியவை எவை ஒத்தி வைக்கப்பட முடியாதவை எவை என்பதனை கருத்திற் கொண்டு அதன் அடிப்படையில் அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் ஏனைய தரங்களில் கற்கும் மாணவ மாணவியருக்கு இணைய வழியில் கற்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ மாணவியர் மட்டுமன்றி ஏனைய தரங்களில் கற்கும் மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய இணைய வழி கற்பித்தல் நடைமுறை பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சுகாதாரப் பணியாளர்களும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan