பிக்கு ஒருவருக்காக பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது - செய்திகளின் தொகுப்பு ( Video)
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைகளில், வெலிகம கொக்மாதுவ பிரதேசத்தின் விகாரை ஒன்றின் பிக்கு ஒருவருக்காக, போலி தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பரீட்சை எழுதிய மற்றொரு பிக்குவை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் புனித மரியாள் தமிழ் வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து நேற்று (15) குறித்த பிக்குவைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பரீட்சை நிலையத்தில், 4 ஆவது நாளாக அந்த பிக்கு நேற்று க.பொ.த. உயர் தர பரீட்சையின் சிங்களம் - பகுதி 2 பரீட்சை எழுதிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட சந்தேகத்துக்கு அமைய அவர் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரியின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,