மதுபோதையில் வீடொன்றின் மீது தாக்குதல்
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று மதுபான போத்தல்களை வீடொன்றின் மீது வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இப்பகுதி வீதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் குழுவொன்று மது போதையில் அங்கிருந்த வீடென்றின் மீது மது போத்தல்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், குறித்த பகுதியில் மது விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் இளைஞர்கள் மது போதையில் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில், வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri