ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் கோரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாகவிருந்தாலும் மதுபானம் மற்றும் புகைப்பிடித்தலுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
“புகைப்பிடித்தலினால் எமது நாட்டில் வருடத்துக்கு இருபதாயிரம் பேரும் நாளொன்றுக்கு அறுபது பேரும் மரணிக்கின்றனர். மதுபானப் பாவனையினால் நாளாந்தம் 40 பேர் மரணிக்கின்றனர்.
பொருளாதார துறைக்கு செலவு
இவ்வாறான நிலையில், இவற்றை ஊக்குவிக்கும் கொள்கைகளை தடுப்பதற்காக செயற்படும் நபர்களை மக்கள் தமது பிரதிநிதியாக தெரிவு செய்யவேண்டும்.
மதுபானம் மற்றும் புகையிலை வரியினால் தான் அரசாங்கம் நிலைநாட்டப்படுகிறது என்ற தவறான கருத்து பலரிடம் உள்ளது.
உண்மையில் புகையிலை மற்றும் மதுசார பாவனையில் ஏற்படும் சுகாதார துறை மற்றும் பொருளாதார துறைக்கு ஏற்படும் செலவு அதைவிட அதிகமாகும்.
எமது நாட்டில் விற்பனையாகும் புகையிலையை எடுத்துக்கொண்டால் அந்த நிறுவனத்தின் 92 வீதமான பங்குகள் பிரித்தானியா மற்றும் அமெரிக்க வல்லரசு நாடுகளுக்கு சொந்தமானது. இதனால் பெருமளவு டொலர் நாட்டை விட்டு செல்கிறது.
சிறந்த தலைவர்
மதுசாரத்தின் விலை அதிகரிப்பால் கசிப்பு விற்பனை அதிகரிப்பதாக பரப்பப்படும் தகவல் போலியானது.
போதைப்பொருள் விற்பனையாளர்கள், புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் என்பவற்றுடன் எந்தெந்த அரசியல்வாதிகளுக்கு தொடர்புள்ளது என்பதை மக்கள் சரியாக இனங்காண வேண்டும்.
பொதுமக்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் போதைப்பொருள், மதுபான மற்றும் புகையிலை பாவனைக்கு உட்படாத வகையில் வாழும் சூழலை உருவாக்க சிறந்த தலைவரை தெரிவு செய்ய வேண்டும்” என்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
