கனடாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீ! ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
கனடாவின் மேற்குப் பகுதியில் தீவிரமாக பரவி வரும் காட்டுத் தீ காரணமாக ஏறக்குறைய 25,000 பேர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளதால் காட்டு தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் நெருக்கடியான நிலை
தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ நிலைமை "முன்னோடியில்லாத நெருக்கடி" என்று பிரதமர் டேனியல் ஸ்மித் நேற்று (06.05.2023)தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன் தினம் (5.05.2023) அல்பெர்டா (Alberta) மாநிலத்தின் 70க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பரவியது.
சில இடங்களில் அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், அங்கிருந்து சுமார் 13,000 பேர் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
சுமார் 122,000 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து நாசம்
நேற்றைய நிலவரப்படி செயலில் உள்ள தீயின் எண்ணிக்கை 103 ஆக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது குறித்து அரசாங்கம் பின்னர் முடிவு செய்யும் என்று ஸ்மித் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சுமார் 122,000 ஹெக்டேர் நிலங்கள் எரிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.