கொடதெனியாவ பகுதியில் ஒட்டுமொத்த ஊரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அல்கய்தா வீடு
கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்த்தி வருவதாக குற்றம் சுமத்தி போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
அல்கய்தா குடும்பம் என அடையாளப்படுத்தப்படும் ஓர் தரப்பினர், ஊர் மக்களை கொடூரமாக தாக்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கத்திகள், வாள்களைக் கொண்டு ஊர் மக்களை தாக்கி வருவதாகவும், இந்த கும்பலிடமிருந்து தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கும்பல் மனித படுகொலைகளை மேற்கொள்வதாகவும் பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொள்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
“அல் கய்தா விரட்டு” “அதிகாரிகள் இன்னும் உறக்கமா” என மக்கள் போராட்டத்தின் போது கோசம் எழுப்பியுள்ளனர்.
அல் கய்தா என்ற கும்பலினால் ஊர் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.



