இஸ்ரேலில் தாக்குதலில் அல் ஜஸீரா ஊடகத்தின் அலுவலகம் தரைமட்டம்
இஸ்ரேலின் வான் தாக்குதல் காரணமாக காசாவில் Associated Press மற்றும் அல் ஜஸீரா அலுவலகங்கள் தரைமட்டமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த இரு ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களும் செயற்பட்டு வந்த 11 மாடி கட்டடத்தில் பல அலுவலகங்களும் குடியிருப்புகளும் இருந்துள்ளன.
இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலிலேயே கட்டடம் தரைமட்டமானதாக அல் ஜஸீரா செய்தி வௌியிட்டுள்ளது. குறைந்தது மூன்று ஏவுகணைகள் கட்டடத்தைத் தாக்கிய பின்னரே கட்டம் சரிவடையத் தொடங்கியதாக நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
தொடரும் தாக்குதல்களினால் 36 சிறுவர்கள் உள்ளிட்ட 137 பாலஸ்தீன பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் நடத்தப்படும் தாக்குதல்களில் 920-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri