உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய தமிழர் பகுதி மாணவர்கள்
க.பொ.த உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28 ஆம் திகதி வெளியாகியிருந்தன.
அந்த வகையில் யாழ்/ அராலி சரஸ்வதி வித்தியாசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதுடன்,யூ.பிரவிந்தன் மற்றும் என்.தர்மினி ஆகியோர் 3ஏ சித்திகளை பெற்று பாடசாலையில் வரலாற்று சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.
மேலும், யூ.பிரவிந்தன் 3ஏ, என்.தர்மினி 3ஏ, பி.யதுசா ஏ 2பி, ஏ.வசந்தினி ஏ 2சி,
ரி.தமிழினி பி 2சி, எஸ். நிதர்சனன் ஏ சி எஸ், ஏ.கவிந்தனா பி சி எஸ்,
என்.அபிராமி 3சி, ரி.கருணியன் பி 2எஸ், எம்.நிக்ஸனா 2சி எஸ், ஏ.நிந்துஜா சி
2எஸ், எஸ்.அனுசிகா சி 2எஸ் பெறுபேறுகளை மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
செய்தி - கஜிந்தன்
மட்டக்களப்பு - பட்டிருப்பு
அண்மையில் வெளியாகிய 2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தர உயர்தரப்பரீட்சையில் மட்.பட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியிலிருந்து, உயிரியல் விஞ்ஞான பிரிவில் தோற்றிய நடேசன் கிருந்திஹரன் 2ஏ பி பெறுபேற்றை பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 3ஆம் இடத்தினை பெற்றுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 179 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், சிங்கப்பூரில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற Fourteenth IMC International Mathematics Contest Nபோட்டிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாகி கலந்து கொண்டார்.
மேலும், National Science Foundation ஆல் நடத்தப்பட்ட Science Research Projects Competition 2019/2020 இல் அவர் உள்ளடங்களான குழு National Winners ஆக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
வருடாந்தம் நடாத்தப்படும் Social Scince Competition இல் தொடர்ச்சியாக 2013, 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் All Island இல் 1ஆம், 3ஆம் இடங்களை பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.
மேலும் 2013, 2018 ஆம்
ஆண்டுகளில் National
Mathematics Olympiad Competition> தமிழ்த்தின பேச்சுப் போட்டி, அறிவிப்பாளர்
போட்டி என பல போட்டிகளில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.
பல துறைகளிலும் சாதனை படைத்த இவர் தற்போது மருத்துவ துறைக்கு
தெரிவாகியமையையிட்டு பெருமிதம் கொள்வதோடு மருத்துவ நிபுணராக வர வேண்டும் என
பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி - ருசாத்



