க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (Photos)

Batticaloa Sri Lanka G.C.E.(A/L) Examination
By Kumar Aug 31, 2022 12:16 PM GMT
Report

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28 ஆம் திகதி வெளியாகியிருந்தன.  

இந்தநிலையில், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் த.துவாரகேஸ்சையும், பாடசாலையில் உயர்தரத்தில் சாதனை படைத்த மற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு - மணிக்கூண்டு கோபுரத்திலிருந்து, சாதனை மாணவன் துவாரகேஸ் மற்றும் சாதனை படைத்த மற்றைய மாணவர்களை பாடசாலைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஊர்வலம் பாடசாலையினை சென்றடைந்ததும் அங்கு பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது க.பொ.த. உயர்தரப்பிரிவில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மாணவன் த.துவாரகேஸ் இதன்போது பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (Photos) | G C E Exam 2021 Student

அத்துடன் உயர்தர பிரிவு மாணவர்களை வழிநடாத்தி இந்த ஆண்டு மிகப்பெரும் சாதனையினை புனித மைக்கேல் கல்லூரி பெறுவதற்கு காரணமாக அமைந்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (Photos) | G C E Exam 2021 Student

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவு மற்றும் வணிக பிரிவுகளில் முதல் இடத்தை மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரியும், பௌதீக விஞ்ஞானம் மற்றும் கலைப்பிரிவில் முதலாம் இடத்தை மன்/சித்திவிநாயகர் பாடசாலையும், உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மன்/அஸ்ஹர் தேசிய பாடசாலையும் பெற்றுள்ளது.

மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த மாணவி அபினா அமலதாசன் உயிரியல் பிரிவில் 2 ஏ 1 பி, சித்திகளை பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

அதே நேரம் தினகரன் ஜனுசா 3 ஏ சித்திகளை பெற்று வணிக பிரிவில், மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (Photos) | G C E Exam 2021 Student

மேலும் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உயர்தர பரீட்சையின் பெறுபேறின் அடிப்படையில் சிவபாலன் யுதர்சன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியாக பௌதீக விஞ்ஞான பிரிவில் முதல் இடத்தையும் , நிலாமதி அன்ரனி 3 ஏ சில்வஸ்டர் சித்திகளைப் பெற்று கலைப்பிரிவில் முதலாம் இடத்தையும் , நகுலராஜா கதுஷன் 3 ஏ சித்திகளைப் பெற்று வணிகப்பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (Photos) | G C E Exam 2021 Student

மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவி மொஹமட் பாருக் பாத்திமா வாஸ்மியா உயிர் முறைமையியல் தொழில்நுட்பம் பாடத்தில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தில் கால் ஒன்றை இழந்த தந்தையின் உழைப்பில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வறுமைக்கு மத்தியில் கலைப்பிரிவில் முதல் நிலை பெற்று நிலாமதி அன்ரனி சில்வஸ்டர், வறுமையோ வாய்ப்போ வெற்றிக்கு அவசியம் இல்லை. விடா முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மாணவர்கள் (Photos) | G C E Exam 2021 Student

மன்னார் மூன்றாம் பிட்டியில் மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றை சேர்ந்த மாணவி நிலாமதி குடும்ப வறுமை காரணமாக சிலரின் உதவியுடன் மன்னாரில் உள்ள அன்னை இல்ல விடுதியில் தங்கி, மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் கல்வி கற்று வந்த நிலையில் 2021 இடம் பெற்ற உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

சட்டத்தரணியாகி பின்தங்கிய என் கிராமத்தை முன்னேற்றுவிப்பதுடன் எனது தந்தையின் கனவையும் நினைவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என நிலாமதி தெரிவித்துள்ளார். 

செய்தி: ஆஷிக்

யாழ்ப்பாணம்

அந்தவகையில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களது பெறுபேறுகள் வருமாறு,

உயிரியல் பிரிவில்,எல்.சிறிகீசன் 3ஏ, உமாசுதன் 2ஏ பி, கே.ராஜமுகுந்தன் 3ஏ, ஏ.டிலோதமன் 2ஏ பி, கே.கீதாஞ்சலி 3ஏ, வி.தனுசிகா ஏ.2பி, ஏ.லவகீசன் ஏ பி சி, வை.லேக்கா ஏ பி சி, எஸ்.கஜநாத் 2பி சி, ஜே.பானுஜா பி 2சி, வி.லோகிதா பி சி எஸ், எம்.விஜிதா பி 2சி, எஸ். ஜீவிதா பி சி எஸ், ஜே.மதுரா பி 2சி சித்தி பெற்றுள்ளனர். 

மேலும் கணிதப் பிரிவில் எஸ்.கஜாணன் 3ஏ, ஆர்.சுவீஸ்கரன் 2ஏ சி, பி.துசாகரன் ஏ 2பி, எஸ்.தர்சனா 2ஏ பி, பி.திரிகரன் ஏ பி சி, பி.நிருசன் 2பி சி, ஜி.ரிச்சட் ஜெயந்திரன் 2பி சி, எஸ்.தக்சிகன் பி 2சி, பி.சங்கவி 3சி, வி.தனுகரன் பி 2சி வர்த்தக பிரிவு பி.கஜலக்சன் ஏ 2பி, ஜே.ஆரணி 3சி, ரி.நிலக்சன் 3சி சித்தி பெற்றுள்ளனர்.

அத்தோடு கலைப்பிரிவு ஏ.ராகவி 3ஏ, கே.பிரணவசுதன் 2பி சி, எம்.கஜனி 2பி சி, ரி.விருத்சனா பி 2சி  என சித்தி பெற்றுள்ளனர்,

 செய்தி - பு.கஜிந்தன்


GalleryGalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US