உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியீடு!
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.
பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டார்.
இதேவேளை ,கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெற்றது. அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை 23 நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.
4,620 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam