உயர்தரப் பரீட்சைக்கு சவாலாக அமையும் மின்வெட்டு
ஜனவரி 23 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சை நடைபெறும் காலங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லை? பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நேற்று(10.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்துப்பூர்வமாக கோரிக்கை
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, பரீட்சை காலத்தில், பரீட்சைகள் ஆணையாளரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை ஒன்றை பெற்று அதற்கு ஏற்வாறு செயற்பட தேவையான நடவடிக்கைகளைத் தற்போது தயாரித்து வருகிறோம்.
பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்படுவது நியாயமில்லை என நான் கருதுகின்றேன்.
எனவே பரீட்சை திணைக்களத்திடம் அட்டவணையை கோரி மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க ஒரு அமைப்பை தயார் செய்ய எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
