அக்குரேகொட சம்பவம்: வெளிநாட்டிலிருந்து அறிவுறுத்தல் - போலி பெயர்களுடன் துப்பக்கிதாரிகளுக்கு தங்குமிட வசதி
அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவத்திற்கு முன்னர், துப்பாக்கிதாரிகளை தங்குமிடத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் சந்தேகநபர் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் கூறுகையில், வெளிநாட்டில் இருக்கும் "மல்வானே டுட்டு" என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், துப்பாக்கிதாரிகளை தங்குமிடத்திற்கு அழைத்து வந்தவர் இந்த நபரே என்று தெரிவித்துள்ளனர்.
தங்குமிட வசதிகளை ஏற்பாடு
இந்த சந்தேகநபர் போலி பெயர்களைப் பயன்படுத்தி, துப்பாக்கிதாரிகளுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்துள்ளார்.

குறித்த நபர் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என தெரியவந்துள்ளதுடன், மல்வானே டுட்டுவின் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் ஈடுபட்டவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பாக துப்பாக்கிதாரி ஒருவர் உட்பட 10 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan