இரட்டைக்கொலை சார்பாக முன்னிலையான 50 வழக்கறிஞர்கள்! விசாரணையில் வெளியான தகவல்
தலங்கம, அக்குரேகொடவில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடுத்த கட்டமாக அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இரகசிய வாக்குமூலம்
தலங்கம - அக்குரேகொட பகுதியில் வெள்ளிக்கிழமை (13) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 45 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது 42 வயதுடைய மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் நவகமுவ பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்கள் நேற்று (18) மீண்டும் கடுவெல நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட சட்டத்தரணி தரப்பினர் சார்பாக கிட்டத்தட்ட 50 வழக்கறிஞர்கள் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் சார்பாக எந்த வழக்கறிஞர்களும் முன்னிலையாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்பின்னர் சிறைக்கு அழைத்துச்செல்லப்படுவதற்கு முன்பு சந்தேகநபர்கள் இருவர் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam