அக்குரேகொட இரட்டைக்கொலை! துப்பாக்கிதாரியின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்
அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கு தங்குமிடம் வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதகம, நன்னபுராவ - திவியப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து மொனராகலை பொலிஸாரால் சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
72 மணிநேரம் தடுத்து காவல் விசாரணை
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அவர் பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை என்று பல சம்பவங்களில் அவர் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
மும்முனை கொலையில் தொடர்பு
சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி, இந்தத் துப்பாக்கிதாரி சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளில் முன்னதாக முன்னிலையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன்,"லாலா" என்பவருடன் இணைந்து தம்மிக மீது தாம் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் இடம்பெற்ற மும்முனை கொலைச் சம்பவத்திலும் தமக்குத் தொடர்பிருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam