தீயில் எரிந்து சாம்பலாகி நீதிமன்ற கட்டடம்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளதுடன் குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நீதிமன்ற கட்டிடத் தொகுதி சம்பவ தினமான நேற்று (21) அதிகாலை 3 மணியளில் கட்டிடம் தீ பற்றியதையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.
தீயில் எரிந்து சாம்பலாகி நீதிமன்ற கட்டடம்
இருந்தபோதும் கட்டிடத்திலுள்ள வழக்கு பதிவேட்டு அறை மற்றும் திறந்த நீதிமன்றம் உட்பட பல பரிவுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் கட்டடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் 3 பேர் முகத்தை மூடியவாறு நீதிமன்ற வளாகத்தில் உள்நுழைந்து கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நபர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
