அகில விராஜ் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலை
முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றைய தினம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகியுள்ளார்.
விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்கு மூலமொன்றை வழங்கியுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புனரமைப்பு பணிகளுக்கு அரச பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அலுவலகத்தில் புனரமைப்பு பணிகளை இலங்கை அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அகில இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.




