இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் டோவல்(Ajit Doval) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளியிடப்பட்ட அரசு உத்தரவின்படி அவர் இன்று (13.06.2024) மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார்.
உளவுத்துறை அதிகாரி
முன்னதாக டோவலின் நியமனத்துக்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந் நிலையில் இது 2024 ஜூன் 10 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி அவருக்கு அமைச்சரவை அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.
1968 இல் இந்திய பொலிஸ் துறையில் இணைந்த அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராவார்.மூலோபாய சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் திட்டமிடல் ஆகியவற்றின் அரிய கலவையாக அவர் கருதப்படுகிறார்.

புகழ்பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் மற்றும் அணுசக்தி விவகாரங்களில் நிபுணராகவும் காணப்படும் இவர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் விடயங்களில் அனுபவமுள்ள உளவுத்துறை அதிகாரியாகவும் உள்ளார்.
2017இல் டோக்லாம் பீடபூமியிலும், 2020இல் கிழக்கு லடாக்கிலும் ஆக்கிரமிப்பு நேரங்களில் சீனாவுடன்,எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இந்தியாவின் சிறப்புப் பிரதிநிதியாக இவர் செயற்பட்டுள்ளதோடு லண்டன் மற்றும் பாகிஸ்தான் ஆ கிய நாடுகளில் பணியாற்றிய போது காலிஸ்தானி தீவிரவாதத்தையும் கையாண்டுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் பணியாற்றும் போது ஜிஹாத் தீவிரவாதத்தையும் இவர் கையாண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri