மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் விரைவில் மாற்றம்! கப்ரால் நீக்கப்படலாம்
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் ஆளுநர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் பொருளாதாரம் கையாளப்படும் விதம் குறித்து நிதியமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள நிபுணர்கள் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விரைவில் கப்ரால் மாற்றப்படுவார் நாணயசபையும் முற்றாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் கடந்த சில நாட்களாக தனக்கும் நிதியமைச்சருக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுவதை தயக்கத்துடன் நிராகரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் நிதியமைச்சு இலங்கை மத்திய வங்கியை கலந்தாலோசிக்காமல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகம் ஆகியவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளமையும் மத்திய வங்கியின் ஆளுநரின் எதிர்காலம் குறித்து வெளியாகும் தகவல்களை உறுதிப்படுத்தும் விதத்தில் காணப்படுகின்றது.ஷ
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri