ஏர் இந்தியா விமான விபத்து: விமானிகளின் உரையாடலில் எழுந்துள்ள சந்தேகம்
ஏர் இந்தியா விமானம் (AI171) விபத்துக்கான ஆரம்ப விசாரணை அறிக்கையில் வெளியாகிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாதிலிருந்து லண்டன் செல்ல திட்டமிடப்பட்ட போயிங் 787-8 டிரீம்லைனர் விமானம், பயணத்தை ஆரம்பித்த சில விநாடிகளுக்குள் இரு எஞ்சின்களும் நின்றுவிட்டதால், விமானம் கீழே விழுந்தது என விசாரணை தொடர்பில் வெளியாகிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமான விபத்து விசாரணை பிரிவு (AAIB) வெளியிட்ட அறிக்கையின் படி, விமானிகள் இருவரும் ‘Fuel Cutoff’ (எரிபொருள் துண்டிப்பு) தொடர்பாக விமானத்தில் உரையாடியுள்ளனர்.
விமானியின் உரையாடல்
குறித்த உரையாடலில், “ஏன் எரிபொருளை நீ கட் செய்தாய்?” என்று விமானி ஒருவர் கேட்டதும், துணை விமானி “நான் அப்படி செய்யவில்லை” என மறுத்துள்ளார்.
Ram Air Turbine (RAT) எனப்படும் backup energy source இயந்திரம் வெளியே வந்ததால், இது என்ஜின் செயலிழந்ததுவிட்டது என்பது அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளது.
இதன்படி விமானம் ஓடுதளத்தை கடந்து சிறிய உயரம் தான் எடுத்திருந்த நிலையில் என்ஜின் செயலிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், விமானியால் தவறுதலாக இது நடந்திருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க விமான பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆளிகள் ஒரே நேரத்தில் அல்லாமல், ஒரே விநாடி இடைவெளியில் மாற்றப்பட்டுள்ளன என்பது வழக்கமான விமானிகளின் செயல்முறையை ஒத்திருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
இது “மனித தவறு”, அல்லது “சாதனத் தோல்வி” என்ற இரண்டில் ஒன்று காரணமாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 40 நிமிடங்கள் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
