கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான தகவல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் நேற்று மாலை 05.00 மணியின் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 80 சதவீதம் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செயல்பாட்டுக் குழுவின் தலைவர் ரோஷனி மசகோரல தெரிவித்துள்ளார்.
எனினும் கட்டார் எயார்வேஸ் விமான நடவடிக்கைகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என ரோஷனி மசகோரல குறிப்பிட்டுள்ளார்.
கட்டார் எயார்வேஸ் ஊழியர்கள்
டோஹா விமான நிலையத்தில் பணியாற்றும் கட்டார் எயார்வேஸ் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இன்னும் தேவைக்கேற்ப பணிக்கு வராமையே இதற்கான காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட அனைத்து இலங்கை விமானங்களும் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
விமான தாமதங்கள்
அத்துடன் விமான நடவடிக்கைகளுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதென இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
மாற்று விமான வழிகளைப் பயன்படுத்துவதாலும், எரிபொருளை பெறுவதற்காக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடுவதாலும் சிறிய விமான தாமதங்கள் ஏற்படக்கூடும்.
எனினும் இன்று அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி செயற்படும் என எதிர்பார்ப்பதாக சுனில் ஜெயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
