பிரித்தானிய விமான சேவையில் பாதிப்பு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரித்தானியா விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கை
இதன் காரணமாக விமானங்கள் தாமதமாக வரலாம் என பிரித்தானியாவின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
We are aware of reports that UK airspace is experiencing delays due to technical difficulties in the UK air traffic control system. Below is what we know so far from NATS.
— Flightradar24 (@flightradar24) August 28, 2023
"We are currently experiencing a technical issue and have applied traffic flow restrictions to maintain… pic.twitter.com/IJYAwIhJbL
இது தொடர்பில் பிரித்தானியாவின் தேசிய விமான சேவை தெரிவிக்கையில்,
“எதிர்கொள்ளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானங்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் விமானங்கள் தாமதமாகலாம்” என வலியுறுத்தியுள்ளது.
