நாட்டின் பல பகுதிகளில் ஆரோக்கியமான நிலையில் காற்றின் தரம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (29) காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன், வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குக் காற்றின் தரச் சுட்டெண் 38 - 72க்கும் இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில்
அத்துடன் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், குருநாகல், கண்டி, கேகாலை, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, புத்தளம், பதுளை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் உள்ள வேளைகளில், குறிப்பாகக் காலை 7.30 முதல் 8.30 வரை மற்றும் பகல் வேளையில் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan