யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மோசம்
இலங்கையின் பல பகுதிகளில் இன்றையதினம்(30.10.2026) காற்றின் தரம் குறைவடைந்து, பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் AQI 142
புத்தளம் AQI 119
அனுராதபுரம் AQI 114 குறித்த மூன்று பகுதிகளும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு காற்றின் தரம் ஆரோக்கியமற்றது என்ற பிரிவில் இடம்பெற்றுள்ளன.
பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை
கொழும்பு AQI 90 பதிவாகி, மிதமான நிலைக்குள் உள்ளது.

AQI (Air Quality Index) வழிகாட்டுதல்களின்படி: 101 முதல் 150 வரையிலான அளவீடுகள் சமூகத்தில் பாதிப்பான குழுக்களுக்கு (இதய அல்லது நுரையீரல் நோய்கள் உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள்) பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனினும், சாதாரண பொதுமக்களுக்கு இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமடையும் ஷிரந்தியின் உடல்நிலை! பெரும் கவலையில் நாமல் மற்றும் குடும்பத்தினர்: பின்னணியில் தீவிர சட்ட ஆலோசனை
போருக்காக வேலை செய்ய முடியாது... 22 நாடுகளில் போராட்டத்தில் குதித்த துறைமுகத் தொழிலாளர்கள் News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri