பலரின் உயிரை பறித்த அகமதாபாத் விமான விபத்து! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
அகமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கி பயணித்த,ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை நிறுவனம் தமது இரங்கலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இரங்கல் செய்தி
அந்த அறிக்கையில்,''ஏர் இந்தியா விமானம் AI 171 விபத்துக்குள்ளான துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த நாங்கள் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.
இந்த துயரமான நேரத்தில், ஏர் இந்தியாவில் உள்ள எங்கள் சக ஊழியர்களுடனும், பரந்த விமானப் போக்குவரத்து சமூகத்துடனும் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கின்றோம் என்பதை அறியத்தருகின்றோம்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, இந்த ஆழ்ந்த கடினமான நேரத்தைத் தாங்கும் வலிமை, ஆறுதல் மற்றும் தைரியம் கிடைக்க வேண்டும் என பிராத்திக்கிறோம்.''என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான விபத்து
இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று 242 பயணிகளுடன் இன்று(12) விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில், பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை 130 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட சடலங்கள் கருகிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
