உலகை உலுக்கிய பயங்கர விமான விபத்து: விமானத்திலிருந்த குறைபாடுகள் அம்பலம்
உலகம் முழுவதும் ஏராளமான பயணிக்கும் போயிங் 787 'ட்ரீம்லைனர்' விமானங்கள், எதிர்காலத்தில் ஒரு பெரும் விபத்துக்களில் சிக்கும் என்று பல முறை எடுத்துரைத்துள்ளதாக அமெரிக்க பொறியியலாளர் சாம் சலேபோர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(12) ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787-8 வி்மானம் பயணித்த 4 நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
விமானத்திலுள்ள குறைபாடுகள்
இந்தநிலையில் அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர் விமானத்திலுள்ள குறைகள் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
சாம் சலேபோர் தெரிவித்ததன்படி, போயிங் நிறுவனத்தின் 787 ரக விமானங்களை தயாரிக்கும் போதுகூடவே முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
குறிப்பாக, விமானத்தின் உடல் அமைப்பில் முக்கியமான பாகமான Fuselage எனப்படும் 2 பிரிவுகளை இணைக்கும் போது, தேவையான பதிவுகள், சோதனைகள், தரச்சான்றுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பாகங்கள் சரியாக பொருந்தவில்லை என்பதைக் கவனித்த ஊழியர்கள், சில நேரங்களில் பாகங்களை மேலே ஏறி தள்ளி, குதித்து, தவறான முறையில் அவற்றைச் சரி செய்துள்ளனர்.இது பாதுகாப்பு முறைகளுக்கு முற்றிலும் முரணானது.
பயணிகளின் உயிர்
மேலும், விமானத்தில் பயணிகளுக்கான ஒக்ஸிஜன் வழங்கும் அமைப்பில் பயன்படுத்தப்படும் குழாய்கள் பல நேரங்களில் மாசுபட்ட நிலையில் பொருத்தப்படுகின்றன.
இந்த குழாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், அவை வெடித்து பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
போயிங் நிறுவனத்தின் முக்கிய விமானங்களில் இத்தகைய அருகில் தெரியாத, ஆனால் ஆழமான குறைபாடுகள் உள்ளன என்பதே வெளிப்படையான உண்மை என குறிப்பிட்டுள்ளார்.
இதில் பயணிகளின் உயிர் தான் முக்கியமாக பாதிக்கப்படவிருக்கின்றது.
சாம் சலேபோர் இதனை நிறுவனத்திற்குள் முறையே தெரிவித்திருந்தாலும், அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதனால் தான், உண்மையை உலகம் அறியச் செய்யும் வகையில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
