தரையிறங்கும் போது திடீரென விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்! பதற்றத்தில் பயணிகள்
தாய்லாந்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது ஓடுதளத்தை சேதப்படுத்தியபடி தரையிறங்கியுள்ளது.
ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடுதளத்தை சேதப்படுத்தியபடி தரையிறங்கியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உச்சக்கட்ட பதற்றம்! வெடித்து சிதறிய ஈரானின் போர்க்கப்பல்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
விமானத்தின் முன்புற சக்கரத்தில் கோளாறு
தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் முன்புற சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விமானம் ஆபத்தான நிலையை எதிர்கொண்ட போதும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக புக்கெட் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சேத விபரம்
சம்பவத்தின் போது, விமானத்தில் 133 பேர் இருந்துள்ளதுடன், யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத நிகழ்வால் பயணிகள் பதற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விமானம் தரையிறங்கும் போது ஓடுதளம் சேதமடைந்தது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri