திடீர் சோதனை - வசமாக சிக்கிய மத்தள விமான நிலைய விமானப்படை அதிகாரிகள்
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலைய 5 விமானப்படை அதிகாரிகள் வசமாக சிக்கியுள்ளனர்.
வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 5 விமானப்படை அதிகாரிகள் மற்றும் இரண்டு சிவில் பிரஜைகள் ஆகியோரை மத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசேட சோதனை
குறித்த விமானப்படை அதிகாரிகளால் விமான நிலைய நிலப்பரப்பினுள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை, வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது சந்தேகநபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கைதை தொடர்ந்து, வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.