விபத்திற்கு உள்ளான ஏர் கனடா விமானம் - நியூயோர்க் விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (23.03. 2026) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடுதளத்தில் தரையிறங்கியபோது
மொண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியபோது அங்கு குறுக்கே வந்த 'ட்ரக் 1' என்ற தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
🚨 BREAKING: Tragedy at LaGuardia — Air Canada Express CRJ-900 (Jazz 646 from Montreal) slammed into a Port Authority fire truck on runway 04 while landing.
— Skint Eastwood (@Skint_Eastwood1) March 23, 2026
At least 2 dead, multiple injuries (incl. firefighters in critical condition). Mass casualty declared. Airport shut… pic.twitter.com/QW3Q6sXsSr
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் மோசமான வானிலை நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் (FAA) இந்த விபத்து குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri