யாழில் ஆலயமொன்றிலிருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலை
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று(28.11.2023) இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலய பூசகர் இன்று(29.11.2023) காலை 7 மணி அளவில் ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளை மேற்கொள்ள முற்பட்ட போதே திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
இந்நிலையில் ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உள்ளிட்ட ஒன்றரை பவுண் நகை திருடப்பட்டுள்ளதோடு ஆலய வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ஒரு தொகை பணமும் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam