113 இற்கும் மேற்பட்ட ஆசனங்களே இலக்கு: மத்தும பண்டார ஆரூடம்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 113 இற்கும் மேற்பட்ட ஆசனங்களை கைப்பற்றுவதே எமது இலக்கு என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னர் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் ஜே.வி.பியினர்.
இரண்டு தடவைகள் அவர்கள் கிளர்ச்சி செய்தனர். அதனால்தான் அரசியல்வாதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நேரிட்டது.
பொலிஸ் பாதுகாப்பு
ஜே.வி.பியினரிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக்கொள்ளவே அன்று பொலிஸ் பாதுகாப்பைக் கோரினோம். இன்று எமக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதற்காகப் பொலிஸ் பாதுகாப்பு பெறப்பட்டது என்ற வரலாற்றை மறக்கக்கூடாது. தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் குழப்பம் இருக்கவில்லை. இதனை மதிக்கின்றோம்.
இப்படியே ஜனநாயக வழியில் ஜே.வி.பி. பயணிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை இலக்கு வைத்தே போட்டியிடுகின்றோம். நாட்டின் ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற முறைமையை பாதுகாக்க மக்கள் வாக்களிப்பார்கள் என நம்புகின்றோம்’’ என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கடன் நிலை - பிரித்தானிய நிதி அமைச்சர் எச்சரிக்கை News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan