ஏஐ தொழில்நுட்ப சட்டத்தை நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றியம்: கடுமையாக்கப்படும் விதிமுறைகள்
செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தும் விரிவான விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னதாக, செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்றியுள்ளதாக சர்வதேச வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கு இடையே 37 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
35 மில்லியன் யூரோ அபராதம்
செயற்கை நுண்ணறிவு மட்டுமின்றி, சமூக ஊடகங்கள் மற்றும் தேடுபொறிகளும் புதிய சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஒப்புக் கொண்டாலும், இந்த நாடுகளில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் சட்டத்தை எளிதாக்க விரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் இச்சட்டம் 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமை சட்டத்திற்கு முரணான விதிமீறலுக்கு 35 மில்லியன் யூரோ அல்லது நிறுவனத்தின் உலகளாவிய வருவாயில் 7 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |