போயிங் விமானங்களின் அதி தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்வி
ஐரோப்பாவின் ஏர்பஸ்ஸுடன் உலகளாவிய விமானச் சந்தையில் முன்னணியில் இருக்கும் போயிங் நிறுவனம், கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விபத்துக்களுக்கு பிறகு அதன் விமானங்களின் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
போயிங் நிறுவனம், கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், போயிங் 737 மெக்ஸ் விமானங்களுடன் சம்பந்தப்பட்ட இரண்டு அபாயகரமான விபத்துகளுக்குப் பிறகு அதன் பாதுகாப்புப் பதிவு குறித்து கடுமையான ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது.
கடந்தகால விபத்துக்கள்
2018 ஒக்டோபரில் இந்தோனேசியாவில் 189 பேர் உயிரிழந்த விபத்தில், போயிங் 737 மெக்ஸ் விமானமும், ஐந்து மாதங்களுக்குப் பிறகு எத்தியோப்பியாவில் 157 பேர் கொல்லப்பட்ட மற்றொரு விபத்துக்குப் பிறகு, போயிங் 737 மெக்ஸ் ஜெட் விமானங்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு உலகளவில் தரையிறக்கப்பட்டன.

தானியங்கி விமானக் கட்டுப்பாட்டு மென்பொருளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக குறித்த விபத்துக்கள் ஏற்பட்டதாக அப்போது கண்டறியப்பட்டது. அதனை தொடரந்து, மென்பொருள் மேம்படுத்தப்பட்டு, போயிங் 737 விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டன.
பின்னர், கடந்த ஆண்டு ஜனவரியில், அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான பயணத்தின் போது போயிங் 737 மெக்ஸ் 9இன் கதவு நடுவானில் கழன்று விழுந்தது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் சம்பவம் உற்பத்தி செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாட்டால் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது, விமானத்தில் தளர்வான வன்பொருள் இருந்தது.