விவசாய அமைச்சின் விசேட வேலைத்திட்டம்!
எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பீ.என்.எம் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இந்த விசேட வேலைத்திட்டம், நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்படவுள்ளது.
விசேட வேலைத்திட்டம்
இதேவேளை சோளம், உளுந்து, பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பல வகையான தானியங்களின் வருடாந்த அறுவடை நாட்டின் நுகர்வுக்கு போதுமானதாக இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட தானியங்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.