மன்னாரில் பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 5700 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு (VIDEO)
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021ஆம், 2022ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 5700 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின் குமார் (A.Merin Kumar) தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2580 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 990 ஏக்கர், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 180 ஏக்கர் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 560 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமாக 5700 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
வட மாகாணத்தின் 2ஆவது மிக பெரிய குளமான முருங்கன் கட்டுக்கரை குளத்தில் 11.5 அடி நீர் காணப்படுவதோடு, தற்போது நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் கட்டுக்கரை குளத்தின் மேலதிக நீர் வெளியேறும் பகுதி ஊடாக 4 அங்குலம் அளவில் நீர் வெளியேறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








பதினாறாவது மே பதினெட்டு 22 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
