கோட்டாபயவிற்கு நடந்த கொடுமை-செய்திகளின் தொகுப்பு
கடந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பியதும் அவருக்கு தற்காலிகமாக வாழ புலர்ஸ் வீதியில் ஸ்டென்மோர் சந்திரவங்க உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டது.
அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்டென்மோர் சந்திரவங்க உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வந்தார்.
விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மகிந்த ராஜபக்ச அங்கு செல்வதாகவும், ஸ்டென்மோர் சந்திரவங்கவில் உள்ள வீட்டை, கோட்டாபாய ராஜபக்சவுக்கு வசிப்பிடமாக வழங்குவதாகவும் உடன்பாடு ஏற்பட்டது.
எப்படியிருப்பினும் மகிந்த ராஜபக்ச மீண்டும் விஜேராமவிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும், ஸ்டென்மோர் சந்திரவங்கவில் உள்ள வீட்டின் சாவி இன்னும் கையளிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் சாவியை அரசாங்கத்திடம் ஒப்படைக்காமல் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,




