இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 9ஆம் தர மாணவன்
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அண்மையில் வெளியானது.
இதன்படி 14 வயது மாணவர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.
கல்வி தகுதிகள்
மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க என்ற மாணவனே இவ்வாறு பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் வணிகவியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்.
இவர் 8ம் வகுப்பில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதி, 6 மாதங்களுக்கு பின், 9ம் வகுப்பில் க.பொ.த உயர் தர வணிகவியல் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
இதற்கமைய உயர்தர பிரிவில் இவர் மூன்று B சித்திகளை பெற்றுள்ளார்.
இதன்படி அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நுழைவதற்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஊர்வலமாக வரவேற்கும் நிகழ்வு
இதன் காரணமாக தேவும் சனஹாஸ் ரண்சிங்கவை ஊர்வலமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று(05.12.2022) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேவம் குருகுல வித்தியாலயத்தில் படித்த அவர், அதன் பின்னர் நானமல் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த மாணவன் குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் மூத்தவர் எனவும் அவரின் பெற்றோர் ஆசிரியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
