புலம்பெயர் சமுகத்திடம் அகத்தியர் அடிகளார் விடுத்துள்ள கோரிக்கை
ஈழத் திருநாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள், சமயத்தினுடைய நிலைமைகள் பற்றி யாவரும் அறிந்திக்கும் நிலையில் புலம்பெயர் சமுதாயம் உண்மையான நிலையை புரிந்து கொண்டு தங்களுடைய ஆதரவுகளை வழங்க வேண்டும் என அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தெடர்பில் அவர் மேலும் கருத்துரைக்கையில்,
குறிப்பாக திருகோணமலை மண்ணில் கடந்த சில நாட்களாக நடந்தேறிய விடயங்கள் யாவரும் அறிந்ததே.
செயல் முறையில் காட்டப்பட வேண்டிய விடயம்
இன நல்லிணக்கம் என பேசிக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை அரங்கேற விடுவது பொருத்தமற்ற செயல் ஒற்றுமை என்பது வாயளவில் சொல்லிக் கொண்டிருக்கின்ற விடயம் அல்ல.
செயல் முறையில் உளரீதியாக காட்டப்பட வேண்டிய விடயம். ஆனால் நடைமுறையில் பெரும்பான்மையினருடைய செயல்பாடுகள் அதற்கு மாறுதலாக காணப்படுகின்றது.
தமிழர்களை வெட்டி களனி கங்கையில் தலைகளை எறிவேன் என்ற வசனம் பண்பாடான ஒரு
அரசியல்வாதி பேசக்கூடிய வசனம் அல்ல.
பாகுபாடு இன்றி ஒன்றுபட வேண்டும்
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதி இவ்வாறு உரையாற்றவதும் சமய பிரதிநிதிகள் இவ்வாறான விடயங்களை கையாளும் விதமும் மானுட பண்புக்கு பொருத்தமானதாக தெரியவில்லை. தமிழர்கள் எல்லோரும் பாகுபாடு இன்றி ஒன்றுபட வேண்டும் என்பதே என்னுடைய அவா!
தங்களுடைய இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழர்கள் தங்களுடைய நிலைமையை சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.
இதற்கிணங்க அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக பெரியோர்கள், மாணவர்கள் சமூகத்தை நேசிக்கின்ற அக்கறை உள்ள புத்தி ஜீவிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நாங்கள் என்ன செய்யலாம் எப்படி எங்களுக்கான இருப்பை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து சிந்தித்து செயல்படுவதற்கு நாங்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
