முதல் பெண் பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல்!
இலங்கையின் முதலாவது பெண் பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு குறித்து விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உள்ளிட்ட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பிம்சானி ஜசிங்காராச்சி கடந்த ஆண்டு பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார். எனினும் அவரின் நியமனம் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு பணிக்கு முரணானது என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு பெண்களை நியமிப்பது தொடர்பான விதிமுறைகள் 'பெண்கள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு வழங்கவில்லை,
எனவே பெண் ஒருவர் இலங்கையில் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியை வகிக்க முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது .
இந்நிலையில் மனுவை பரிசீலனைக்கு எடுத்த உயர் நீதிமன்றம் மனு மீதான விசாரணையினை எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானித்தது.



