பணமோசடி செய்தவரை விடுவித்த பொலிஸார் : வவுனியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (Photos)
இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி பணமோசடி செய்த நபரை மக்கள் பிடித்து
கொடுத்தும், வவுனியா பொலிஸார் அவர்களை விடுவித்துள்ளதாக தெரிவித்து வவுனியா
பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்டவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(28.08.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்தியாவுக்கு பௌத்தர்களை யாத்திரையாக அழைத்துச் செல்வதாக தெரிவித்து வவுனியா மற்றும் மதவாச்சி ஆகிய பகுதிகளில் 20இற்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றுள்ளார்.
நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை
ஒரு நபரிடமிருந்து தலா 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் மற்றும் அவர்களது கடவுச்சீட்டு, அடையாள அட்டை புகைப்பட பிரதி உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்ற நபர் யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மக்களிடம் பணம் பெற்ற பின்னர் அவர்களுடனான தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால், அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பணம் செலுத்தியோர், மதவாச்சி பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். எனினும் சம்மந்தப்பட்டவர் பொலிஸ் நிலையம் செல்லாது தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 18ஆம் திகதி குறித்த நபர் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்பாக நிற்பதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிய வந்ததையடுத்து அங்கு சென்ற பாதிக்கப்பட்டோர் குறித்த நபரை பிடித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதற்கமைய குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்குமாறு தெரிவித்து பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவில்
ஒப்படைத்துள்ளனர்.
எனினும் முறைப்பாடு எடுக்கப்படாது குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்துவதுடன், வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றினை இன்று பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், வவுனியா பொலிஸார் குற்றவாளியை விடுவித்ததாக தெரிவித்து பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
