மீண்டும் வரிசை யுகம் - கலவரங்கள்..! துரிதமாக செயற்படுமாறு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தற்காலிக இடைவேளை விடப்பட்டுள்ளது, வெகு விரைவில் வரிசை யுகம் - பழைய கலவரங்கள் மீண்டும் தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07.06.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டின் தற்போதைய இயல்பு நிலை தற்காலிகமானது. வரிசை யுகம், பழைய முரண்பாடுகள், பழைய கலவரங்கள் மீண்டும் தோற்றம் பெறும். ஆகவே தற்போதைய நிலைமையை சரி என்று குறிப்பிட முடியாது.
பொருளாதார பாதிப்பால் மூளைசாலிகள் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் வங்கி கடன் வட்டி வீதம் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நாட்டில் மிகுதியாகவுள்ள தொழில் முயற்சியாளர்களை பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் துரிதமாக செயற்பட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,