நாட்டை வெற்றி கொள்ள செய்யும் போராட்டத்தின் இரண்டாம் அலை! பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரை
நாட்டில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நாட்டை வெற்றி கொள்ள செய்யும் போராட்டத்தின் இரண்டாம் அலை என்னும் தொனிப்பொருளில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - வொக்ஸ்வொல் வீதியில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரை
இந்த போராட்டம் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை பயன்படுத்தி கண்காணிப்பு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிரபல அரசியல்வாதி ஒருவரின் வழிகாட்டலில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போராட்ட மையத்தின் ஊடக இணைப்பாளர் குறித்த அரசியல்வாதிக்கு நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய அமைப்பு உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாகோகம போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சிலரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பொலிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
