மீண்டும் அதிகரித்த பேருந்து கட்டணம்
எரிபொருள் தட்டுபாடு காரணமாக இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் இன்று முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்தனர்.
கட்டண உயர்வு
இதனையடுத்து தற்போது பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுபாடு
இதற்கமைய பேருந்து கட்டண உயர்வை தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முற்றாக நிறுத்தப்படும் தனியார் பேருந்து சேவைகள் |