சட்ட மா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்படுமா!
இலங்கையின் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த விவகாரம் தொடர்பில் தெளிவு படுத்தி உள்ளார்.
சட்ட மா அதிபரை பணியில் இருந்து நீக்குவதற்காக குற்றப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித பேச்சுக்களும் நடைபெறவில்லை என அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

சமூக ஊடகங்களில் சட்டமா அதிபருக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சரோ அல்லது சட்டமா அதிபரோ அல்லது வேறு யாருக்கு எதிராகவோ குற்றச்சாட்டுக்கள் இருந்தால் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தற்போது சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படுகின்றது என்பதனால் குற்றம் இழைத்திருந்தால் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்புச் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
எனினும், சட்டமா அதிபரை பணி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித பேச்சுக்களும் நடைபெறவில்லை என்பதை உறுதிப்பட கூற முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam