நீண்ட வறட்சியின் பின் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழை
கடந்த சில நாட்களாக நிலவி வரும் நீண்ட வறட்சியின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது.
கடுமையான வறட்சியுடனான காலநிலை நிலவியதன் காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் தோட்ட செய்கையாளர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், தற்போது கிழக்கு மாகாணத்தில் மழை பெய்வது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச நீர்தினம்
மேலும், இன்றைய தினம் சர்வதேச நீர்தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியுடனான காலநிலை நீங்கப்பெற்று கடும் மழைபெய்து வருகின்றது.
வறட்சியான காலநிலை நீங்கி நேற்று முதல் பரவலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைபெய்துவருவதன் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








Ethirneechal: போனை தர்றேன் தர்றேன் என கதறிய அறிவுக்கரசி.... மாஸ் காட்டிய பெண்களுக்கு இப்படியொரு ஏமாற்றமா? Manithan

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
