புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்: மற்றுமொரு தமிழ் மாணவியின் சாதனை
யாழ்ப்பாணம் கோண்டாவில், பரஞ்சோதி வித்தியாலயத்தில், 23 வருடங்களின் பின்னர் முதன்முறையாக மாணவி ஒருவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில், பரஞ்சோதி வித்தியாலய மாணவி ஜஸ்ரின் ஜனனி 160 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
இப்பாடசாலையில், 2000ஆம் ஆண்டிற்கு பின்னர், அதாவது 23 வருடங்களின் பின்னர், இம்முறைதான் மாணவியொருவர் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாணவியின் வேண்டுகோள்
பாடசாலைக்கு தனது ஒழுங்கான வரவு, அதிபர், ஆசிரியர் மற்றும் பெற்றோரின் விடா முயற்சியே தனது வெற்றிக்கு காரணமென குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு சமூகமளிப்பதோடு பெற்றோர்களும் அதில் கரிசனையெடுக்குமாறும் குறித்த மாணவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றிய நான்கு மாணவர்களில் மாணவன் ஒருவன் 144 புள்ளிகளை பெற்றுள்ளதோடு ஏனைய இருவரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
You May like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam