கோட்டாபய விடாபிடி! மகிந்தவின் கடுமையான நிலைப்பாடு: சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்
ரணிலை அடுத்த ஜனாதிபதியாக்க போவதில்லை என கோட்டாபய விடாபிடியாக இருப்பதாகவும் அதேநேரம் ரணிலை தவிர வேறு எவராலும் நம்மை காப்பாற்ற முடியாது என மஹிந்த தெரிவிப்பதாகவும் புலனாய்வு செய்தியாளர் எம்.எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நேற்று முதல் மஹிந்தவிற்கும் கோட்டாபயவிற்கும் இடையில் தொடர்ந்து தொலைப்பேசி உரையாடல் இடம்பெறுகின்றது.
இந்த கலந்துரையாடல் ரணிலை அடுத்த ஜனாதிபதியாக்குவது தொடர்பில் நிகழ்கின்றது. இந்த கலந்துரையாடலில் முதலில் மஹிந்தவின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்த கோட்டாபய, தற்போது அந்த கருத்துக்களுக்கு இணங்கியுள்ளதுடன் அவர் சார்பில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இதனடிப்படையில் இலங்கையில் வாழ விரும்பும் கோட்டாபய தனக்கான முழு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை சுமார் 350 படை பலம் கொண்ட பாதுகாப்பும் அவருக்கான ஒரு இல்லமும் வேண்டும் என கேட்டுள்ளார். இந்த கோரிக்கைகளுக்கு பிரதமர் ரணிலும் இணக்கம் தெரிவித்துள்ளார்.” என எம்.எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழு விடயங்களையும் உள்ளடக்கி வருகின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி.