உலகக்கிண்ண தொடரில் மற்றுமொரு அதிர்ச்சியை கொடுத்த ஆப்கானிஸ்தான்
உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய (08.06.2024) போட்டியில், நியூசிலாந்து (New Zealand) அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.
கயானாவின் பிராவிடன்ஸ் நகரில் இடம்பெற்ற குறித்த போட்டியில், ஆப்கானிஸ்தான் 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் (Gurbaz), 56 பந்துகளை எதிர்கொண்டு 80 ஓட்டங்களை பெற்றார்.
அதிர்ச்சி தோல்வி
பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட் மற்றும் மட் ஹென்றி ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும் லோகி பெர்குசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 15.2 ஓவர்களுக்கு 75 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் சார்பாக பாரூக்கி 4 விக்கெட்டுக்களையும் ரஷித் கான் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
